close
Choose your channels

ஒரே ஒரு வெற்றி.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு..!

Wednesday, July 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் இயக்கத்தில் உருவான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தில் ‘குணா’ பாடல் இணைக்கப்பட்டிருந்ததை அடுத்து தமிழகத்திலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குனர் சிதம்பரம் ஒரு தமிழ் படத்தை இயக்குவார் என்றும், மலையாள படத்தை அவர் மீண்டும் இயக்க இயக்குகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஃபாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் சிதம்பரம் இயக்க உள்ள ஹிந்தி படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment