ஒரே ஒரு வெற்றி.. 'மஞ்சும்மெல் பாய்ஸ்' இயக்குனருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,July 17 2024]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனருக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் இயக்கத்தில் உருவான ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தில் ‘குணா’ பாடல் இணைக்கப்பட்டிருந்ததை அடுத்து தமிழகத்திலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குனர் சிதம்பரம் ஒரு தமிழ் படத்தை இயக்குவார் என்றும், மலையாள படத்தை அவர் மீண்டும் இயக்க இயக்குகிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஃபாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் சிதம்பரம் இயக்க உள்ள ஹிந்தி படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஊதா ஊதா ஊதாப்பூ.. தளபதி விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை ரம்பா..!

தளபதி விஜய்யை நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'இந்தியன் 2' திரைப்படம் எவ்வளவு நேரம் ட்ரிம் செய்யப்பட்டது.. லைகாவின் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் ட்ரிம் செய்யப்பட வேண்டும்

ஒரே இடத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா, சூர்யா- ஜோதிகா, மகேஷ்பாபு.. குவியும் கமெண்ட்ஸ்..!

ஒரே புகைப்படத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா,  சூர்யா - ஜோதிகா,  மகேஷ் பாபு - நர்மதா, ஜெனிலியா, பிரித்விராஜ் உள்பட பல பிரபலங்கள் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி ஆவேசம்.. மஞ்சு வாரியர் ரொமான்ஸ்.. அசர வைக்கும் 'விடுதலை 2' ஃபர்ஸ்ட் லுக்..!

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை 2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு

மிஷ்கின் படத்தில் இணைகிறார் கமல்ஹாசன் மகள்.. 2 பேரும் சேர்ந்து என்ன பண்ண போறாங்க தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில்  கமல்ஹாசன் மகள்  ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.