ரஜினி மட்டும் சினிமாவுக்கு வரலைன்னா நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்: 'மஞ்சும்மள் பாய்ஸ்' நடிகர்..!

  • IndiaGlitz, [Sunday,March 03 2024]

ரஜினிகாந்த் என்பவர் மட்டும் சினிமாவுக்கு வரவில்லை என்றால் நான் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டேன் என ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் விஜய் கௌரவ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மலையாள படமான ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் கூட இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த இந்த படம் கமல்ஹாசன் நடித்த ’குணா’ படத்தில் இடம்பெற்ற குகை சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்பதும் ’குணா’ படத்தில் இடம்பெற்ற பாடல் மற்றும் சில காட்சிகளை கூட இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வந்த பிறகு தான் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு ’குணா’ என்ற ஒரு படம் வந்ததே தெரியும் என்பதும் இந்த நேரத்தில் ’குணா’ படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தமிழ் நடிகரான விஜய் கௌரவ் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’கமல்ஹாசன் மட்டுமின்றி ரஜினிகாந்த் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்லி ஆக வேண்டும். ரஜினிகாந்த் என்ற இமேஜை பார்த்து வளர்ந்தவன் நான், ஒருவேளை ரஜினிகாந்த் என்ற ஒரு நபர் இந்த சினிமாவில் இல்லாமல் இருந்திருந்தால், நானெல்லாம் நடிகராகவே வந்திருக்க மாட்டேன், ஏதாவது பிசினஸ் பண்ணி வேற எங்கேயோ போய் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

More News

This is how RGV changed Jagan,Pawan,CBN names in Vyooham

Before watching the movie "Vyuham," it's important to note how Ram Gopal Varma altered the names of real-life characters in the film.

Mukesh Ambani in tears at his son Anant's wedding

The Ambani family weddings are renowned worldwide for their opulence and grandeur,

Actress Varalakshmi Sarathkumar engaged to Nicholai Sachdev

Popular actress Varalakshmi Sarathkumar is set to embark on a new chapter in her life as she prepares for marriage.

இங்க வரும்போது ஒரு மரம் கூட இல்ல ஆனா இப்ப... : Kitty Krishnamoorthy's Exclusive Garden Tour

தளபதி, பாட்ஷா போன்ற படங்களில் நடித்துள்ள கிட்டி என்று அழைக்கப்படும் நடிகர் கிருஷ்ணமூர்த்தி அவரின் வீட்டுத் தோட்டத்தை பற்றியும், அதை பராமரிப்பதை பற்றியும் அதனால் ஏற்பபும் நன்மைகள் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இரவு இரண்டு, மூணு மணிக்கெல்லாம் போன் பண்ணி தொல்லை பண்ணுவாங்க – மகேஸ்வரி

சன் ம்யூசிக்கில் வி.ஜே.வாக அறிமுகமாகி, விஜய் டி.வி சீரியல்களில் கதாநாயகியாக நடித்த மகேஸ்வரி தன்னுடைய கொடூரமான திருமண வாழ்க்கை பற்றியும், அதில் இருந்து அவர் மீண்டு இன்று பல துறைகளில் சாதித்து வருவது பற்றியும் மனம் திறந்துள்ளார்.