ஃபேஸ்புக்கில் காதலித்து தியேட்டரில் கல்யாணம் செய்த பெண்ணின் கணவர் திடீர் மாயம்
- IndiaGlitz, [Saturday,March 25 2017]
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதெல்லாம் அந்த காலம். தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் காதலித்து கல்யாணம் செய்வதுதான் டிரெண்டாக உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் உள்ள ஜோடியை இணைத்து வைப்பது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள்தான்
இந்நிலையில் இதே போல் ஒரு இன்ஸ்டண்ட் திருமணம் சிவகெங்கை மாவட்டத்திலும் நடந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண் ஃபேஸ்புக்கில் நட்புடன் பழகிய வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இவர்களது திருமணம் மதுரையில் உள்ள தியேட்டரில் நடைபெற்றது. பின்னர் இந்த ஜோடி தனிவீடு எடுத்து இரண்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்தினர்
இந்நிலையில் திடீரென வெங்கடேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் செய்வதறியாது திகைத்த மஞ்சுளா, வெங்கடேஷின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெங்கடேஷின் அம்மாவும், அவரது உறவினர்களும் மஞ்சுளாவை மிரட்டி விரட்டிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெங்கடேஷை தேடி வருகின்றனர்.,