அஜித்தின் 'துணிவு' படம் குறித்து மாஸ் தகவலை சொன்ன மஞ்சுவாரியர்!

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் ஒவ்வொருவராக டப்பிங் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை மஞ்சுவாரியர் தனது பகுதியின் டப்பிங் பணியை செய்து வரும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஒருபக்கம் ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘துணிவு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு படம் ஆகும்.

More News

கதறியழுத நிவாஷினியை ஒரே வார்த்தையில் சிரிக்க வைத்த அசல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அசல் கோலார் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் அசல் வெளியேறும்போது நிவாஷினி கதறி

சமந்தா குணமாக நாகசைதன்யா வீட்டில் இருந்து வந்த வாழ்த்து!

 பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேற்று அறிவித்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'அசல் இருப்பாரு, இருக்கணும்': நிவாஷினி பேச்சுக்கு கமல் கூறிய பதிலடி!

'அசல் இருப்பாரு, இருக்கணும்' என நிவாஷினி கூறியதற்கு கமல்ஹாசன் கூறிய பதிலடி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா? படக்குழுவினர்களின் அதிரடி பதில்!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் 'வாத்தி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி

கமலிடம் கதை சொல்லி காத்திருக்கும் இளைய தலைமுறை இயக்குனர்கள்: அடுத்த சான்ஸ் யாருக்கு?

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கதைசொல்லி இளம் இயக்குநர்கள் காத்திருக்கும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி தற்போது ஏற்பட்டுள்ளது.