close
Choose your channels

அஜித்துடன் இமயமலையில் பைக் பயணம்: மஞ்சுவாரியர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜீத் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஏகே 61’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தனது நண்பர்களுடன் அஜித் பைக்கில் பயணம் செய்தார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பயணத்தில் ’ஏகே 61’ படத்தின் நாயகி மஞ்சுவாரியர் கலந்து கொண்டிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமான தகவல் ஆகும். அஜித்துடன் மஞ்சுவாரியார் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அஜித்துடன் மேற்கொண்ட இந்த பயணம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் அஜித் அவர்களுடன் பைக் பயணம் செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. பயணம் என்றால் அதிக ஆர்வம் கொண்ட நான் நான்கு சக்கர வாகனத்தில் பல கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறேன். ஆனால் முதல்முறையாக டூவீலரில் ஒரு பயணம் வந்திருக்கின்றேன். இதற்கு காரணமான சக பயணிகள் அனைவருக்கும் நன்றி. இந்த பயணத்தில் என்னை இணைத்துக்கொண்ட அஜித் அவர்களுக்கும் எனது நன்றி’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment