'அசுரன்' மஞ்சுவாரியரா இவர்? டாப் நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்கும் தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த ’அசுரன்’ திரைப்படத்தை இருவருமே இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்கமாட்டார்கள். சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ்க்கும், சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வெற்றிமாறனுக்கும், சிறந்த தமிழ் படம் என்றும் மூன்று விருதுகளை அள்ளிக் கொண்டு உள்ளது ’அசுரன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்பட மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்திருந்தனர். குறிப்பாக பச்சையம்மாள் என்ற கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியர், தனது கேரக்டரில் முழுவதுமாக ஒன்றி போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் ’அசுரன்’ படத்தில் வயதான தோற்றத்தில் இரண்டு இளைஞர்களுக்கு அம்மாவாக நடித்து இருந்த மஞ்சுவாரியாரியரின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சு மஞ்சுவாரியரா இவர்? என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார் என்பதும் இன்றைய இளம் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த போட்டோ உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டோவை பார்த்து தமிழில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் இன்னும் ஒரு ரவுண்ட் மஞ்சுவாரியார் வருவார் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout