close
Choose your channels

விதை அஜித் போட்டது.. மஞ்சுவாரியரின் பைக் பயண புகைப்படங்களுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Saturday, July 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை மஞ்சு வாரியர் பைக் பயணம் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ’விதை அஜித் போட்டது’ என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

மலையாள திரையுலகில் பிரபலமான மஞ்சு வாரியர் என்பதும், அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் நடித்த ’அசுரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர் அதன் பின்னர் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு அஜித்துடன் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில் அஜீத் தான் அவருக்கு பைக் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்ததாகவும், மஞ்சு வாரியர் பைக் ஓட்ட லைசென்ஸ் எடுக்கும்படி அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து பைக் ஓட்டி பழகிய மஞ்சு வாரியர் முறைப்படி லைசென்ஸ் எடுத்ததாகவும், அதன் பின்னர் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக் வாங்கி சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வீடியோக்களை அவர் போது பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பைக் பயணம் செய்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தனது பைக் முழுவதும் சேறாகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தனது குழுவினர்களுடன் பைக் ஓட்டுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறிய அவர் ஒரு சிலருக்கு டேக் செய்து நன்றி கூறிய நிலையில் அதில் அஜித் குமார் பெயரும் உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் ’விதை அஜித் போட்டது என்ற கமெண்ட் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி ஆர்யா நடித்து வரும் ’மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் இருந்து நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment