சென்னையில் மஞ்சு வாரியர் மகளுக்கு கிடைத்த பெருமை.. ஒரு வாழ்த்து கூட இல்லையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை மஞ்சு வாரியரின் மகள் டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் மஞ்சுவாரியரிடம் இருந்து ஒரு வாழ்த்து கூட வரவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மீனாட்சி என்ற மகள் பிறந்தார். இதனை அடுத்து மஞ்சுவாரியர், திலீப்பை விவாகரத்து செய்த நிலையில் இவர்களது மகள் மீனாட்சி தந்தையுடன் இருந்து விட்டதாக தெரிகிறது. மேலும் நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் மீனாட்சியை திலீப் -காவ்யா மாதவன் தம்பதியே வளர்த்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லூரியில் மீனாட்சி டாக்டர் பட்டம் பெற்றுள்ள நிலையில் திலீப், காவ்யா மாதவன் ஆகியோருடன் இணைந்து மீனாட்சி டாக்டர் வாங்கிய புகைப்படம் காவியா மாதவனின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பதிவில் ’வாழ்த்துக்கள் டாக்டர் மீனாட்சி கோபாலகிருஷ்ணன், நீ நிரூபித்து விட்டாய், உன் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தான் உன்னை இங்கு வர வைத்துள்ளது. இன்று உன்னை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், நீ இன்னும் பல சாதனை செய்வாய் என நாங்கள் அறிவோம்.. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக’ என்று பதிவு செய்துள்ளார்.
திலீப்பும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் மஞ்சுவாரியரிடம் இருந்து ஒரு வாழ்த்து கூட வெளியானதாக தெரியவில்லை, இது ஏன் என ரசிகர்களுக்கு பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments