'வேட்டையன்' படத்தின் மஞ்சு வாரியர் கேரக்டர்.. மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதோடு, வரும் இருபதாம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா சிறப்பாக நடைபெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், லைக்கா நிறுவனம் இந்த படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் அறிமுக வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. நேற்று ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் கதாப்பாத்திரங்களை வெளியிட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் மஞ்சு வாரியர் நடித்துள்ள கதாப்பாத்திரம் குறித்த வீடியோவையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மஞ்சு வாரியர், ரஜினியின் மனைவியாக தாரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரது காட்சிகள் உள்ள சில நொடிகள் கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில், ரஜினி மற்றும் அமிதாப்புடன் மஞ்சு வாரியர் தோன்றும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.