close
Choose your channels

அஜித்தை போலவே பைக் லவ்வராக மாறிய நடிகை மஞ்சு வாரியர்… மிரட்டலான புகைப்படங்கள்!

Monday, June 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை மஞ்சு வாரியர் ஒரு பைக் லவ்வராகவே மாறியிருக்கிறார். இந்நிலையில் அவர் வாங்கியுள்ள புதிய பைக்கில் பயணம் செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

பிரபல மலையாள நடிகையான நடிகை மஞ்சு வாரியர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து ‘துணிவு’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதில் நடிகர் அஜித்தின் டீம் மேட்டாக நடித்திருந்த அவர் சண்டை காட்சிகளிலும் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் துணிவு திரைப்படத்திற்காக நடிகர் அஜித் மேற்கொண்ட லடாக் பைக் டிரிப்பிலும் நடிகை மஞ்சு வாரியர் கலந்துகொண்டார். அப்போது பைக் பயணத்தின் மீது நடிகை மஞ்சு வாரியருக்கு தீராத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிதாக லைசென்ஸ் வாங்கிய அவர் சினிமா படப்பிடிப்புக்கு மத்தியிலும் அவ்வபோது பைக் டிரிப் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் பைக் டிரிப்பிற்காக நடிகை மஞ்சுவாரியர் BMW WR1250 GS எனும் புதிய பைக்கை வாங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதன் விலை ரூ.28 லட்சம் விலை எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மினி கூப்பர், ரேஞ்ச் ரோவர் போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது பைக் லவ்வராக மாறியிருக்கிறார்.

இந்நிலையில் கருப்பு உடையில் கெத்தாக நடிகை மஞ்சுவாரியர் பைக் ஓட்டும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் அஜித்தை டேக் செய்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் இன்னொரு ‘பைக் லவ்வர் வந்துட்டாங்க‘ என்றும் ‘வாழ்த்துகள்‘ என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment