திருமணத்திற்கு பிறகு ஸ்லிம் பியூட்டியான நடிகை மஞ்சிமா மோகன்… வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல்எடை குறித்து விமர்சனங்களைச் சந்தித்துவந்த நிலையில் தற்போது உடல்எடை குறைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
3 வயதாக இருந்தபோதே மலையாள சினிமாவான ‘கலியூஞ்சல்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதைத் தொடர்ந்து சூப்பர் கிட்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குட்டி தொகுப்பாளினியாக இருந்துவந்த அவர் பல்வேறு தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். இதையடுத்து 2015 இல் ‘ஒரு வடக்கன் செல்பி’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
தொர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலேயே க்யூட்டான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான இவர் தொடர்ந்து ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘எஃப்ஐஆர்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் கௌதம் கார்த்தியுடன் பழகி வந்ததாகக் கூறப்பட்டது. இந்தக் காதல் ஜோடிகள் கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது நடிகை மஞ்சிமா மோகன் பார்ப்பதற்கு சற்று எடை கூடுதலாக இருந்தார். இதனால் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில் அவரே தனது எடை குறித்த கருத்துகளுக்கு நேர்மறையாகப் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து இருப்பது போன்ற ஒருசில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குறைவான நேரத்தில் இத்தனை பெரிய டிரான்ஸ்பர்மேஷனா என்று ஆச்சர்யத்தை வெளியிட்டு அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments