மஞ்சிமா  மோகன்   இடுப்பில் கயிறு கட்டி இழுக்கும் கெளதம் கார்த்திக்.. வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,August 16 2023]

நடிகை மஞ்சிமா மோகன் திருமணத்தின் போது குண்டாக இருந்த நிலையில் தற்போது அவர் கடுமையாக வொர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் அவரது தற்போதைய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடந்த மாதம் அவர் தலைகீழாக வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. திருமணத்தின் போது இருந்த உடல் எடைக்கும், இப்போது அவரை பார்ப்பதற்கு மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வொர்க் அவுட்டில் அவருக்கு உதவியாக அவரது கணவர் கெளதம் கார்த்திக் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சிமா மோகன் இடுப்பில் கயிற்றை கட்டி அவர் தூக்கி விடுகிறார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக, ‘இது எளிதானது அல்ல ஆனால் எதுவும் சாத்தியமற்றது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முயற்சி செய்யுங்கள்.. எதுவும், யாரும் உங்களை தடுக்க முடியாது’ என்று மஞ்சிமா பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.