இந்த பந்தத்திற்கு நட்பு என பெயரிட விரும்பினேன், ஆனால்.. கெளதம் கார்த்திக்கின் ரொமான்ஸ் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதை தனது சமூக வலைதளத்தில் ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு உறுதி செய்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் குறித்து உணர்வுபூர்வமான கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
எங்கள் பயணம் உண்மையில் வித்தியாசமானது. நாங்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் கேலி செய்வதன் மூலம் தான் எங்கள் நட்பை தொடங்கினோம். எப்போதும் சண்டை சச்சரவு செய்து கொண்டே முட்டாள்தனமான விஷயங்களைப்பற்றி வாதிட்டு வருவோம். எங்கள் நண்பர்களால் கூட எங்கள் வாதங்களை தாங்க முடியவில்லை.
ஆனால் எங்களிடையே ஒரு அழகான பிணைப்பு எப்போது உருவானது என்று எனக்கே தெரியாது. இந்த பிணைப்பிற்கு நட்பு என முதலில் பெயர் வைக்க முடிவு செய்தேன். ஆனால் அதை விட வலிமையாக இருந்தது என்பதை அறிந்து நான் அதை வளர்த்துக் கொண்டே வந்தேன். நான் அதற்கு சிறந்த நட்பு என்று பெயரிட்டேன். ஆனால் அதை விட வலுவாக வளர்ந்தது. அதை தினம் தினம் நீங்கள் தான் வளர்த்து வந்தீர்கள். நீங்கள் அதை நாளுக்குநாள் வலுவாகவும் வலுவாகவும் வளர்த்ததால் நான் விரும்பியதை விட என்னை நீங்கள் வலுவாகவும் ஆக்கினீர்கள்.
நான் மோசமான நிலையில் இருந்தபோது நீங்கள் என் பக்கத்தில் நின்று எனக்கு ஆறுதலாக இருந்தீர்கள். நான் ஒரு நிமிடம் கூட நம்பிக்கை இருப்பதை நீங்கள் விரும்பவில்லை. நீங்கள் எப்போதும் என்னை வாழ்க்கையில் முன்னேறி முன்னேறி செல்ல தூண்டுகோலாக இருக்கிறீர்கள். என்னை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். எப்போதும் எனக்கு நேர்மையாகவே இருந்து வருகிறீர்கள். என் சுயமதிப்பை சந்தேகிக்காமல்இருக்கின்றீர்கள்.
இதுவரை நான் உணராத ஒரு அமைதி இப்போது என் இதயத்தில் உள்ளது. என் வாழ்க்கையில் நீங்கள் வேரூன்றியதை அடுத்து எங்கள் பிணைப்பை விவரிக்க காதல் என்ற வார்த்தை கூட போதுமானது என்று நான் நம்பவில்லை. உங்களுடன் நான் பக்கத்தில் இருந்தால் வாழ்க்கை என் மீது வீசக் கூடிய எதையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன். ஒவ்வொரு நாளும் உங்கள் அன்பை சம்பாதித்து கடைசி வரை இந்த பந்தத்தை வளர்ப்பேன். நான் உங்களை முழுமையாக நேசிக்கிறேன். விரைவில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து பயணத்தை தொடங்க முடிவு செய்து இருக்கிறோம்' என்று கூறியுள்ளார். மஞ்சிமாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com