''சண்டக்கோழி 2' படத்தில் நடிப்பது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம்
Sunday, July 3, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள 'சண்டக்கோழி 2' திரைப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்திகள் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' பட நாயகி மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கவுள்ளதாக நேற்று கிட்டத்தட்ட அனைத்து இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனால் இந்த செய்தியை மஞ்சிமாமோகன் தற்போது மறுத்துள்ளார். 'சண்டக்கோழி 2' படத்தில் நான் நடிப்பது குறித்து என்னிடம் பலர் விசாரித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த படத்தின் குழுவினர் யாரும் தன்னை அணுகவில்லை என்றும் அந்த படத்திற்காக நான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வந்துள்ள தகவல் முற்றிலும் வதந்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் ஒரு படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் இந்த இரண்டு படங்களை தவிர வேறு எந்த தமிழ்ப்படத்திலும் இப்போதைக்கும் நடிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment