சிம்பு நாயகிக்கு கிடைத்த 'ராணி' யோகம்

  • IndiaGlitz, [Wednesday,September 27 2017]

கடந்த 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'குவீன்' திரைப்படம் சிறந்த இந்தி  திரைப்படம் மற்றும் சிற்நத நடிகை போன்ற தேசிய விருதுகளை பெற்றது மட்டுமின்றி மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பணமழை பெய்தது

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளின் ரீமேக் செய்தி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் கங்கனா ரனாவத் வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். அதேபோல் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கவுள்ளார். இந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் மலையாள ரீமேக் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'ஜம் ஜம்' என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' பட நாயகி மஞ்சிமாமோகன் குவீன் ஆக நடிக்கவுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும், நிச்சயம் இந்த கேரக்டருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிப்பேன்' என்றும் மஞ்சிமா கூறியுள்ளார்.

More News

மிதிலிராஜ் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நடிகை யார்?

இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதிலிராஜ் சமீபத்தில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றவர்.

டோக்கியோவுக்கு செல்கிறது விஜய்சேதுபதியின் 'விக்ரம்வேதா'

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் 'விவேகம்' சுனாமியிலும் தப்பித்து நல்ல வசூலை தமிழகம் முழுவதும் அள்ளியது.

அசாதாரன சூழலை சந்திக்க ஆயூத்தமாக இருங்கள். டிஜிபி உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. ஆட்சிக்கு எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலாவது ஆபத்து வரும் சூழ்நிலையே ஒவ்வொரு நாளும் உள்ளது.

குளத்தில் நண்பன் மூழ்கியது கூட தெரியாமல் செல்பியில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்

கோவில் குளம் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது உடன் குளித்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் மூழ்கியதை கூட கவனிக்காமல் செல்பி மோகத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர்களால்

ஆஸ்கார் விருதுக்கு 'பாகுபலி 2' தேர்வு செய்யப்படாதது குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 90வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் 'நியூட்டன்' என்ற பாலிவுட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.