சிம்பு நாயகிக்கு கிடைத்த 'ராணி' யோகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'குவீன்' திரைப்படம் சிறந்த இந்தி திரைப்படம் மற்றும் சிற்நத நடிகை போன்ற தேசிய விருதுகளை பெற்றது மட்டுமின்றி மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பணமழை பெய்தது
இந்த படத்தின் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளின் ரீமேக் செய்தி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் கங்கனா ரனாவத் வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். அதேபோல் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கவுள்ளார். இந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்தின் மலையாள ரீமேக் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'ஜம் ஜம்' என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் ஆகும் இந்த படத்தில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' பட நாயகி மஞ்சிமாமோகன் குவீன் ஆக நடிக்கவுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக தான் பெருமைப்படுவதாகவும், நிச்சயம் இந்த கேரக்டருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடிப்பேன்' என்றும் மஞ்சிமா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com