விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் படத்தின் ஹீரோயின் இவர்தான்....

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]
தனுஷ் நடித்த 'அனேகன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கே.வி.ஆனந்த் அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி உறுதி செய்யப்பட்டதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.