'மஞ்சப்பை' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபுதேவா: நாயகி யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்த ’மஞ்சப்பை’ என்ற படத்தை இயக்கிய ராகவன் அதன்பின் ‘கடம்பன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபுதேவா நடிக்க உள்ளார்

இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’பீட்சா’, ‘சேதுபதி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இயக்குனர் ராகவன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார் என்பதும் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

More News

கதாநாயகியாக நடிக்கும் வனிதா: யார் இயக்கத்தில் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'சந்திரலேகா' என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பின்னர் ராஜ்கிரணின் 'மாணிக்கம்' உள்பட ஒருசில படங்களில் நடித்த வனிதா,

ஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரக் களத்தில் அதிமுக “வெற்றி நடைபோடும் தமிழகம்” எனும் பெயரில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்!

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 50,422 சதுர அடியில் 80 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் வெற்றி பெற்றார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா?

சென்னையில் இங்கிலாந்துக்கு இடையிலான இந்திய கிரிக்கெட் அணியின் முதல் 2 டெஸ்ட் தொடர் போட்டிகள் நடைபெற இருக்கிறது