டிடிஎப் வாசன் நடிக்கவிருந்த 'மஞ்சள் வீரன்' படத்தின் புதிய ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென, "மஞ்சள் வீரன்" படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில், தற்போது "மஞ்சள் வீரன்" படத்தின் ஹீரோவாக பிக் பாஸ் போட்டியாளரும் நகைச்சுவை நடிகருமான கூல் சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அவர் புதிய வீடியோ ஒன்றின் மூலம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்.
முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் கூல் சுரேஷ், இந்த படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த படம் குறித்து கூல் சுரேஷ் கூறியபோது, ‘அனைவருக்கும் வணக்கம், இந்த கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பூஜை இன்று முதல் ஆரம்பம், இதுவரைக்கும் இந்த கூல் சுரேஷுக்கு ஆதரவு அளித்து வந்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, இனி மேலும் ஆதரவு தரப்போற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
ரசிகர்கள் இல்லை என்றால் இந்த கூல் சுரேஷ் இல்ல, படத்த பத்தி இன்னும் நிறைய சொல்லணும் அப்படின்னு நினைக்கிறேன், இன்னைக்கு நான் வெளியூரில் இருக்கிறதுனால படத்தை பற்றி நிறைய பேச முடியல, சென்னைக்கு வந்ததும் கண்டிப்பாக படத்தை பற்றி அப்டேட் உங்களுக்கு வந்துட்டே தான் இருக்கும், வெந்து தணிந்தது காடு, மஞ்சள் வீரனுக்கு வணக்கத்தை போடு’ என்று கூறினார்.
Cool Suresh Rocked💥
— Ranjith Kannan (@PaRanjithKannan) October 14, 2024
TTF Vasan Shocked🙄
Cool Suresh in 'Manjal Veeran' Directed by Chellam#ManjalVeeran #Chellam #CoolSuresh #TTFVasan @iamcoolsuresh @ttfvason @TTFvasanArmy pic.twitter.com/nnbaUq63xg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments