டிடிஎப் வாசன் நடிக்கவிருந்த 'மஞ்சள் வீரன்' படத்தின் புதிய ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்க இருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென, மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோவாக பிக் பாஸ் போட்டியாளரும் நகைச்சுவை நடிகருமான கூல் சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அவர் புதிய வீடியோ ஒன்றின் மூலம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்.

முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கும் கூல் சுரேஷ், இந்த படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த படம் குறித்து கூல் சுரேஷ் கூறியபோது, ‘அனைவருக்கும் வணக்கம், இந்த கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் பூஜை இன்று முதல் ஆரம்பம், இதுவரைக்கும் இந்த கூல் சுரேஷுக்கு ஆதரவு அளித்து வந்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, இனி மேலும் ஆதரவு தரப்போற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,

ரசிகர்கள் இல்லை என்றால் இந்த கூல் சுரேஷ் இல்ல, படத்த பத்தி இன்னும் நிறைய சொல்லணும் அப்படின்னு நினைக்கிறேன், இன்னைக்கு நான் வெளியூரில் இருக்கிறதுனால படத்தை பற்றி நிறைய பேச முடியல, சென்னைக்கு வந்ததும் கண்டிப்பாக படத்தை பற்றி அப்டேட் உங்களுக்கு வந்துட்டே தான் இருக்கும், வெந்து தணிந்தது காடு, மஞ்சள் வீரனுக்கு வணக்கத்தை போடு’ என்று கூறினார்.

More News

இன்று மாலை 6 மணிக்கு சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பா? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் போஸ்டர்..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்ஆர் பிரபு, தனது சமூக வலைதளத்தில் இன்று மாலை தனது அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறி ஒரு போஸ்டரையும்

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்.. இயக்குனர் யார் தெரியுமா?

கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான "தொடரி" என்ற திரைப்படம் உருவான நிலையில், அடுத்த ஆண்டு மீண்டும் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு திரைப்படத்தில் இணைந்திருப்பதாக

'சரவணன் மீனாட்சி' சீரியல் நடிகரின் மனைவி கர்ப்பம்.. 5வது மாத நலங்கு விழா புகைப்படங்கள்..!

சரவணன் மீனாட்சி உள்பட  பல சீரியல்களில் நடித்த நடிகரின் மனைவி கர்ப்பமாகி உள்ளதை அடுத்து ஐந்தாவது மாத நலங்கு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும்