தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையா அஜித், விஜய் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது மகன் உமாபதியை வைத்து 'மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர்

'மணியார் குடும்பம்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

உமாபதி, மிருதுளா முரளி, யாஷிகா, சமுத்திரக்கனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள தம்பிராமையா இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

எனக்கு சொந்தமானதை ராகுல் காந்தி செய்துவிட்டார்: ப்ரியாவாரியர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாள நடிகை ப்ரியாவாரியர் 'ஒரு அதார் லவ்' என்ற படத்தின் டீசரில் கண்சிமிட்டியது மற்றும் புருவ நடனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்? புதிய தகவல்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் 59வது படத்தை  இயக்குவது யார்?

சிறந்த சர்வதேச நடிகர் போட்டியில் 'மெர்சல்' விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

'சீமராஜா' டிரைலர்-பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மதுரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள 'சீமராஜா'

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் - விவியன் ரிச்சர்ட்ஸ்

கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் அன்றைய பிரபலமாக இருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் விவியன்  ரிச்சர்ட்ஸ் கெட்டப்பில் நடித்திருப்பார்.