மணிவண்ணனின் மகனா இவர்? மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!
- IndiaGlitz, [Friday,May 28 2021]
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் மணிவண்ணன் ’கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார். அதன்பின் அவர் பல வெற்றி படங்களை இயக்கினார் என்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதிக திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிவண்ணனுக்கு, ரகுவண்ணன் என்ற மகன் உள்ளார் என்பதும் அவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் குறித்த தகவல் கடந்த சில வருடங்களாக தெரியாத நிலையில் தற்போது அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் கூடிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ரகுவண்ணன் கடந்த 2013ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த அபி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆத்விக் மற்றும் ஆதித்யன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி குழந்தைகளுடன் ரகுவண்ணன் இருக்கும் இந்த புகைப்படத்தை மணிவண்ணனின் ரசிகர்கள் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.