இந்தப் பயணம் கடினமானது… புற்றுநோய் அனுபவத்தை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குநர் மணிரத்னத்தின் “பம்பாய்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து, “உயிரே“, “இந்தியன்“, “முதல்வன்“, “பாபா“, “ஆளவந்தான்“ போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதேபோல பாலிவுட் சினிமாவிலும் முன்னணி இடத்தைப் பிடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நேபாள தொழிலதிபர் சம்ரத் தாஹன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணம் 2 வருடங்களே நீடித்த நிலையில் அதைவிட பெரிய அதிர்ச்சியாக அவர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனையில் 1 வருடம் தீவிர சிகிச்சைப் பெற்று புற்றுநோயில் இருந்து அவர் மீண்டுவந்தார். மேலும் இதுகுறித்த தன் அனுபவத்தை அவர் “ஹீல்ட்:ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப்“ என்று புத்தகமாக எழுதி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது (நவம்பர் 7) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா, “இந்தப் பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதைவிட கடினமானவர்“ என்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments