நேற்று சாம்பியன், இன்று தமிழ் நடிகையுடன் திருமணம்: பிரபல கிரிக்கெட் வீரருக்கு குவியும் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

நேற்று நடைபெற்ற முஸ்டாக் அலி கிரிக்கெட் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணி மோதியது. இந்தப் போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த போட்டியில் மனிஷ் பாண்டே மிக அபாரமாக விளையாடி 60 ரன்கள் குவித்ததே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று தனது அணி சாம்பியன் பட்டம் பெற பெரும் உதவியாக இருந்த மனிஷ் பாண்டே இன்று நடிகை அம்ரிதா ஷெட்டியை திருமணம் செய்து கொண்டார். நடிகை அம்ரிதா செட்டி சித்தார்த் நடித்த ’உதயம் என்.எச்.4’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

மனிஷ் பாண்டே - அம்ரிதா ஷெட்டி திருமணம் மும்பையில் மிகச்சிறப்பாக இருதரப்பு உறவினர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

32 வயதாகும் மனிஷ் பாண்டே விரைவில் நடைபெற உள்ள மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில், இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

நிர்வாண வீடியோ அனுப்பிய காதலி: ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து கம்பி எண்ணும் காதலன்:

நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோ மற்றும் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களை காதலன் வற்புறுத்தியதால் காதலி அனுப்பிய நிலையில் அந்த வீடியோக்களை காதலன் ஃபேஸ்புக்கில் ஷேர்

சொந்தத்தீவு, இனி தனி நாடு. 6 டன் தங்க நகைகளோடு செட்டில் ஆன நித்தியானந்தா..!

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்

40%-க்கு மேல் உயர்கின்றன செல்போன் கட்டணங்கள்..!

அன்லிமிட்டெட் அழைப்புகளை மாத கட்டணத்திற்கு இலவசமாக அளித்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன