தமிழில் மட்டும் ஏன் 'நாராயணா' இல்லை: 'பொன்னியின் செல்வன்' குறித்து மணிரத்னம் அளித்த விளக்கம்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30-ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்தார்.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலரில் உள்ள ஒரு காட்சி சர்ச்சைக்குரியதாக மாறிய நிலையில் அது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் அம்புகள் ஆழ்வார்க்கடியான் மேல் பாயும்போது அவர் தமிழில் மட்டும் ’அய்யோ’ என்று கூறுவதும் மற்ற அனைத்து மொழிகளிலும் ’நாராயணா’ என கூறுவதும் ஏன் என்று செய்தியாளர்களில் ஒருவர் கேட்டார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த மணிரத்னம், ‘மாற்றம் இல்லாமல் எந்த ஒரு திரைப்படத்தையும் உருவாக்க முடியாது என்றும் ஆழ்வார்க்கடியான் கேரக்டர் படம் முழுவதும் நாராயணா நாராயணா என்று தான் சொல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாவலின் ஐந்து பாகங்களை இரண்டு படங்களாக கொண்டுவர வேண்டுமென்றால் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும், அப்படியே எடுக்க வேண்டுமென்றால் வெப்சீரிஸ் ஆகத்தான் எடுக்க வேண்டும் என்றும், சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிகமாக சொல்லக்கூடிய ஒரு மீடியா என்றும், எனவே அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் கூறினார். ஆனால் இந்த படத்தில் கல்கி எழுதிய நாவலின் உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கலைஞர் கருணாநிதி அவர்களே வைரமுத்துவை தமிழின் அடையாளமாக அருகில் உட்கார வைத்துக் கொள்வார் என்றும், ஆனால் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வைரமுத்துவை பயன்படுத்தாதது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மணிரத்னம் பதில் கூறிய போது ’தமிழ் என்பது பல அறிஞர்களால் கலைஞர்களால் வளர்க்கப்பட்டு வரும் ஒரு மொழி என்றும், வைரமுத்து அவர்கள் மிகப் பெரிய கவிஞர் என்பது உண்மைதான் என்றும், அவருடன் நான் பல படங்களில் பணிபுரிந்து உள்ளேன் என்றும், ஆனால் அவரையும் தாண்டி இன்னும் நிறைய பேர் தமிழில் திறமையானவர்கள் இருக்கின்றார்கள், இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுடைய திறமைகளும் வெளியே வரவேண்டும் என்பதற்காகவும் நான் புதியவர்களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்து உள்ளேன் என மணிரத்னம் கூறினார்.


 

More News

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: அதிரடி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது

வெங்கட்பிரபு - நாக சைதன்யா படம் குறித்த மாஸ் தகவல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள்

பிரியங்கா மோகனை அடுத்து இன்னொரு நாயகி: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் சூப்பர் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறங்கி செய்யலாம்ன்னு நினைக்கிறேன்: புளூசட்டை மாறன் குறித்து கெளதம் மேனன்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த படம் 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக

தனுஷின் 'நானே வருவேன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த கலைப்புலி எஸ்.தாணு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.