close
Choose your channels

மணிரத்னம் இயக்கும் தென்னிந்தியாவின் மல்டி ஸ்டார் படத்தின் விபரங்கள்

Monday, October 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே நாம் தெரிவித்தபடி இந்த படத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத்பாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிரத்னம் இயக்கும் தென்னிந்தியாவின் மல்டி ஸ்டார் படமான இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியையும் செய்கின்றனர். மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment