மணிரத்னம் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்!
- IndiaGlitz, [Wednesday,September 04 2019]
பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து ஆலயம் புரடொக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ஸ்ரீராம். இந்த நிறுவனத்தின் சார்பில் விஜயகாந்த் நடித்த 'சத்ரியன்', மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா', 'பம்பாய்' போன்ற வெற்றிப் படங்கள் தயாரிக்கப்பட்டன.
மேலும் அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படமான 'ஆசை' திரைப்படமும் இந்த நிறுவனம் தயாரித்த படம்தான் என்பதும், இந்த படம் அஜித்துக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பதும் குறிப்பிடதக்கது. ஆலயம் நிறுவனம் தயாரித்த கடைசி படம் விக்ரம் நடித்த 'சாமுராய்' ஆகும்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஸ்ரீராம் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த ஸ்ரீராம் அவர்களுக்கு நளினி என்ற மனைவியும் நிகில் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது