செக்க சிவந்த வானம்: தமிழகத்தை உலுக்கும் முக்கிய நிகழ்வின் கதையா?

  • IndiaGlitz, [Sunday,February 18 2018]

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஐஸ்வர்யாராய், அதிதிராவ் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் 'செக்க சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் முன்னணி நடிகர்களின் கேரக்டர்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தை உலுக்கி வரும் மீத்தேன் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும், இந்த படத்தில் அரவிந்தசாமி ஒரு அரசியல்வாதியாகவும், அதிதிராவ் ஒரு போல்டான கேரக்டரிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அருண்விஜய்  வில்லன் கேரக்டரிலும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

அதேபோல் சிம்பு உள்பட முன்னணி நட்சத்திரங்கள் அண்ணன் தம்பிகளாகவும், இவர்களில் சிம்பு எஞ்சினியர் கேரக்டரில் நடித்து வருவதாகவும் கூறபப்டுகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தந்தை நடிகரின் படத்தில் பிரபல மகள் நடிகை

கோலிவுட் திரையுலகில் தந்தை - மகள் ஒரே படத்தில் பணிபுரிவது புதியது அல்ல. கே.பாக்யராஜ் - சரண்யா, கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன், அர்ஜூன் - ஐஸ்வர்யா உள்பட பலர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார் ஜோதிகா: நடிகர் சிவகுமார்

நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணையும் ஆக்சன் கிங்?

தல அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. மீண்டும் 'மங்காத்தா 2' படத்தில் இருவரும் விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

வித்யாபாலனின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி கொடுத்து 36 வயதினிலே' 'மகளிர் மட்டும்' மற்றும் 'நாச்சியார்' என ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்.

ராகுல் ப்ரித்திசிங் விடுத்த எச்சரிக்கை எந்த இயக்குனருக்கு?

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை ராகுல் ப்ரித்திசிங், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார்.