20 வருடங்கள் உயிருக்கு போராடிய மணிரத்னம் பட நடிகை: தயாராகிறது திரைப்படம்

  • IndiaGlitz, [Monday,July 20 2020]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றித் திரைப்படம் ’திருடா திருடா’. பிரசாந்த் மற்றும் ஆனந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஹீரா நாயகியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் சந்திரலேகா என்ற முக்கிய கேரக்டரில் நடிகை அனு அகர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை அனு அகர்வால் இந்த படத்தில் ’கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்’ என்ற பாடலுக்கு அட்டகாசமாக கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஹிந்தித் திரையுலகிலும் அனு அகர்வால் நுழைந்து அங்கும் ஒருசில வெற்றி படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அனு அகர்வாலை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். இருப்பினும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். இருப்பினும் கோமாவில் இருந்தபடியே மன உறுதியுடன் இருந்து உயிர் பிழைத்தார். மேலும் இயற்கை வைத்தியம், யோகா ஆகியவற்றின் உதவியோடு அவர் முற்றிலும் குணமடைய 20 வருடம் ஆகியது

இந்த நிலையில் 20 வருடங்களாக தனது உயிரை காக்க போராடிய அனு அகர்வால் வாழ்க்கை வரலாறு தற்போது வெப்தொடராக தயாராக உள்ளது. முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கும் இந்த தொடரில் அனு அகர்வால் கேரக்டரில் அவரே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் தனது வாழ்க்கை போராட்டம் குறித்து அனு அகர்வால் புத்தகமாக எழுதியுள்ளார் என்பதும் அந்த புத்தகம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது