கே.பாலசந்தர் பட டைட்டிலை தேர்வு செய்த மணிரத்னம்

  • IndiaGlitz, [Saturday,November 12 2016]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததே.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தமிழில் மட்டுமே டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தெலுங்கு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'டூயட்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதே பெயரில் கடந்த 1994ஆம் ஆண்டு பிரபு, மீனாட்சி சேஷாத்திரி நடிப்பில் கே.பாலசந்தர் ஒரு படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களுக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை.