மணிரத்னம் இயக்கிய 'உயிரே' பட நடிகையின் தந்தை தற்கொலை.. 6வது மாடியில் இருந்து குதித்தாரா?

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’உயிரே’ திரைப்படத்தில் நடித்த நடிகையின் தந்தை மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’உயிரே’. இந்த படத்தில் ’தைய்யா தைய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலைக்கா அரோரா தந்தை அணில் அரோரா மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனில் அரோரா திடீரென தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.. முதல்முறையாக மாமியார் வீடு சென்ற பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்த நிலையில் முதல் முறையாக தனது மாமியார் வீட்டுக்கு சென்ற வீடியோவை

ஒரே புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார்.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படத்தில் இரண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள் இருக்கும் நிலைகள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

'96' படத்தின் 2ஆம் பாகம்.. விஜய் சேதுபதியின் மனைவியிடம் கதை கூறிய இயக்குனர்..!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான '96' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

விஜய் டிவி டிடிக்கு ஆபரேஷன்..  என்ன நடந்தது?

விஜய் டிவி பிரபலம் டிடிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அதிர்ச்சி தகவல்!

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார் என்பதையும் பார்த்தோம்