மணிரத்னம் இயக்கிய 'உயிரே' பட நடிகையின் தந்தை தற்கொலை.. 6வது மாடியில் இருந்து குதித்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’உயிரே’ திரைப்படத்தில் நடித்த நடிகையின் தந்தை மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஷாருக்கான், மனிஷா கொய்ராலா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’உயிரே’. இந்த படத்தில் ’தைய்யா தைய்யா’ என்ற பாடலுக்கு நடனமாடியவர் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. இவர் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலைக்கா அரோரா தந்தை அணில் அரோரா மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனில் அரோரா திடீரென தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout