நீர்ச்சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்: 'பொன்னியின் செல்வன்' பொன்னி நதி பாடல்

பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது விறுவிறுப்பாக புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கம்பொஸ் செய்து அவரே பாடியுள்ள இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலின் முதல் நான்கு வரிகள் இதோ:

காவிரியால் நீர் மடிக்கு அம்பரமாய் அணையெடுத்தான்
நீர்ச்சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளிச்சத்தம் கேட்டதுமே கல்பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்