'பொன்னியின் செல்வன்' எத்தனை மொழிகளில் ரிலீஸ்? படக்குழுவினர் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சற்று முன் ’வருகிறான் சோழன்’ என்ற டைட்டிலில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Look out! Brace yourself.
— Madras Talkies (@MadrasTalkies_) July 2, 2022
Get ready for an adventure filled week!
The Cholas are coming! #PS1 ?? @LycaProductions #ManiRatnam pic.twitter.com/uLYPJ4Z0LC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments