நாளையும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கிய அப்டேட்டா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக ’பொன்னியின் செல்வன்’ படத்தின் போஸ்டர்கள் அட்டகாசமாக வெளிவந்து இணையங்களை வைரலாக்கியது என்பதை பார்த்தோம். அது மட்டுமின்றி இன்று மாலை 6 மணிக்கு வெளியான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். திரையுலகினர் இந்த டீசரை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் நாலை காலை 10.44 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த ட்விட்டின் கமெண்ட் பகுதியில் ரசிகர்கள் ’பொன்னியின் செல்வன்; திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுவிட்டதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் நாளை காலை 10.44 மணிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ன அறிவிப்பு வெளியிட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற விருப்பம் தெரிவித்து சமீபத்தில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் முன்னிலையில் நடந்த ‘டான்’ திரைப்பட வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Another exciting collaboration announcement coming up!
— Red Giant Movies (@RedGiantMovies_) July 8, 2022
Tomorrow at 10.44 AM. Stay tuned for it ???? pic.twitter.com/wUhUYn3IWc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com