நவரசா: விஜய்சேதுபதியின் 'எதிரி'யின் எதார்த்தமான கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் முதல் பகுதியான ’எதிரி’ என்ற பகுதியின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
இந்த பகுதியில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த பகுதியில் தொடக்கத்தில் ரேவதி தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கிறார். இருப்பினும் தனது குழந்தைகளுடன் அவர் சந்தோஷமாக இருக்கிறார்
இந்த நிலையில் அவரது வீட்டிற்கு வரும் விஜய் சேதுபதியை ரேவதியின் கணவர் வரவேற்று தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். சில நிமிடங்கள் கழித்து அந்த அறையில் திடீரென சில சப்தங்கள் கேட்கும் போது ரேவதி அங்கு சென்று பார்க்கும் போது தனது கணவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதனை அடுத்து விஜய் சேதுபதி தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவர் கொலை நபருடன் கற்பனையில் பேசுகிறார். இருவருக்கும் இடையிலான உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி ரேவதியை சந்தித்து தனக்கு மன்னிப்பு கொடுங்கள் என்று கேட்கிறார். அதற்கு ரேவதி அளிக்கும் விளக்கமும் விஜய்சேதுபதியின் அமைதியும் தமிழ் சினிமாவுக்கு மிகப் புதிது
விஜய்சேதுபதி யாரைக் கொலை செய்தார்? ஏன் கொலை செய்தார் என்பதற்கான விடையும் கிளைமாக்ஸில் தெரிகிறது. அதேபோல் ரேவதியின் கணவர் விஜய்சேதுபதிக்கு செய்த துரோகம் என்ன என்பதும் அடுத்தடுத்த காட்சிகளில் விளக்கப்படுகிறது
கோவிந்த் வசந்தன் இசையில் பிஜாய் நம்பியாரின் அருமையான இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ’எதிரி’ என்ற பகுதி கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com