close
Choose your channels

கொரியா சர்வதேச சர்வதேச திரைப்பட விழாவில்  மெட்ராஸ் டாக்கீஸ் படம்..!

Thursday, October 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் நியூட்டன் சினிமாவின் "பாரடைஸ்" மலையாளத் திரைப்படம் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது!

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், நியூட்டன் சினிமாவும் இணையும் 'பாரடைஸ்' என்கிற மலையாளத் திரைப்படத்தின் சர்வதேச பிரீமியர் தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் முதன்மை விருதான "கிம் ஜெசோக்" விருதுக்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இயக்குநரும் பல சர்வதேச விருதுகளை பெற்றவருமான பிரசன்னா விதானகே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2022-ல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலை உயர்வு இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிப்பதற்கு காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தங்களுடைய ஐந்தாம் திருமண விழா கொண்டாட அங்கு செல்லும் மலையாளிகள் வெப் சீரிஸ் தயாரிப்பாளரான, காணொளி பதிவாளர் (vlogger) மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளையும், விசித்திரமான அனுபவங்களையும் காட்சிப்படுத்தும்' 'பாரடைஸ்' ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள் .

பிரச்சனை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம்பெறும் முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும்.

மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும்,ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை "கே"யும் கையாண்டுள்ளனர்.

பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும். அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்ட படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. படத்தின் முக்கிய நடிகர்களும் படக்குழுவினரும் இதில் பங்கு பெறுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment