கொரியா சர்வதேச சர்வதேச திரைப்பட விழாவில்  மெட்ராஸ் டாக்கீஸ் படம்..!

  • IndiaGlitz, [Thursday,October 05 2023]

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் மலையாளத் திரைப்படம் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது!

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், நியூட்டன் சினிமாவும் இணையும் 'பாரடைஸ்' என்கிற மலையாளத் திரைப்படத்தின் சர்வதேச பிரீமியர் தென்கொரியாவின் பிரசித்தி பெற்ற பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்த விழாவின் முதன்மை விருதான கிம் ஜெசோக் விருதுக்கும் பாரடைஸ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இயக்குநரும் பல சர்வதேச விருதுகளை பெற்றவருமான பிரசன்னா விதானகே இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2022-ல் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் அதைத் தொடர்ந்து எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு, விலை உயர்வு இலங்கையில் நாடு தழுவிய போராட்டம் வெடிப்பதற்கு காரணமாக இருந்தது. இச்சமயத்தில் தங்களுடைய ஐந்தாம் திருமண விழா கொண்டாட அங்கு செல்லும் மலையாளிகள் வெப் சீரிஸ் தயாரிப்பாளரான, காணொளி பதிவாளர் (vlogger) மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகளையும், விசித்திரமான அனுபவங்களையும் காட்சிப்படுத்தும்' 'பாரடைஸ்' ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைப்படமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள் .

பிரச்சனை வரும்போது தான் மனிதர்களின் உண்மை முகம் தெரிகிறது என்பதைக் கூறும் இப்படம், இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளையும் அங்குள்ள மலையகத் தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் பேசுகிறது. அதோடு இராமாயணத்தில் இடம்பெறும் முக்கியமான சம்பவங்களையும் இடங்களையும் கதையோட்டத்தில் காணலாம் என்கின்றனர், இப்படத்தின் தயாரிப்பாளர்களான ஆன்டோ சிட்டிலப்பள்ளியும், ஸனிதா சிட்டிலப்பள்ளியும்.

மலையாளத்தில் பல முக்கிய படங்களில் நடித்த ரோஷன் மேத்யூவும், தர்ஷனா ராஜேந்திரனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவியும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும்,ஒலிக்கலவையை தபஸ் நாயக்கும், இசையை கேயும் கையாண்டுள்ளனர்.

பாரடைஸ் உன்னதமான உணர்வுகளின் கோர்வையோடு, சினிமாவின் அழகியலை அருமையாக கையாண்டிருக்கும் ஒரு தலைசிறந்த இயக்குனரால் எடுக்கப்பட்ட படமாகும். அதோடு குறிப்பிடத்தக்க நடிகர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சேர்ந்து நேர்த்தியாக எடுக்கப்பட்ட படமுமாகும். இப்படத்தை வழங்குவதில் மெட்ராஸ் டாக்கீஸ் பெருமை கொள்கிறது என்றார் அந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவா ஆனந்த்.

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. படத்தின் முக்கிய நடிகர்களும் படக்குழுவினரும் இதில் பங்கு பெறுகிறார்கள்.

More News

நான் ஆபாச நடிகையா? பொதுமக்கள் முன் கண்ணீர் வடித்த பெண் அமைச்சர்..!

ஆந்திர மாநில இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் நான் ஆபாச நடிகையா?

பைக்கை எரித்து விடுங்கள்.. யூடியூப் சேனலை மூடிவிடுங்கள்.. டிடிஎப் வாசன் மீது காட்டமான நீதிபதி..!

அதிவேகமாக பைக் ஓட்டி  தனது யூடியூப் சேனலில் அது குறித்த வீடியோக்களை பதிவு செய்யும் டிடிஎப் வாசன் சமீபத்தில் பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்றார்.

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக ஒரு இடுப்பு போட்டோஷூட்.. 'வாழை' நடிகையின் வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு இடுப்பு போட்டோஷூட் புகைப்படத்தால் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக நடிகை திவ்யா

த்ரிஷாவுக்கு ரத்தம் தானா? டிரைலருக்கு முன் வெளியான 'லியோ' போஸ்டர்..!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சஸ்பென்ஸ் உடைந்தது.. புதிய ஆதி குணசேகரன் இவர்தான்.. 'எதிர்நீச்சல்' புரமோ வீடியோ வைரல்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த  ஜி மாரிமுத்து