20 வருடங்களுக்கு பின் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகும் மணிரத்னம் நாயகி.. 'கீதாஞ்சலி'யை மறக்க முடியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஒரு திரைப்படத்தில் கீதாஞ்சலி என்ற கேரக்டரில் நடித்த நடிகை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜுனா, கிரிஜா நடித்த திரைப்படம் ’கீதாஞ்சலி’. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் ’இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பதும் ஒரிஜினல் தமிழ் படத்திற்கு கிடைக்கும் வசூல் இந்த படத்துக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தால் நடிகை கிரிஜாவுக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கிரிஜா நடித்தார். 2003 ஆம் ஆண்டு இந்தி திரைப்படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நிலையில் அவர் இங்கிலாந்து சென்று விட்டார். அங்கு அவர் பத்திரிகையாளராக பணியாற்றியதாக கூறப்பட்டது

இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு கன்னட திரைப்படத்தில் நடிக்க கிரிஜா ஒப்பந்தமாகியுள்ளார். சந்திரஜித் பெலியப்பா என்பவரது இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சிங்கிள் மதர் கேரக்டரில் கிரிஜா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றால் தொடர்ந்து கிரிஜா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

நிகழ்ச்சி நடைபெறும் போது திடீரென வந்த போலீஸ்.. என்ன ஆச்சு விஜய் டிவி புகழ்?

விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றின் நடந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென காவல்துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை திரும்பும் முன் கவர்னரை சந்தித்த ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் நிலையில் அவர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் ஜார்கண்ட் மாநில

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் “மத்தகம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு.. நாளை ரிலீஸ்..!

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் டிடி நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி+

'லியோ' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரா? வேற லெவல் தகவல்..!

லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே LCU என்ற லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக அவரது 'விக்ரம்' திரைப்படத்தில் 'கைதி'

நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்.. சீரியல் நடிகையின் ஆதங்க வீடியோ..!

நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் தயவுசெய்து இது மாதிரி தவறான வீடியோக்களை