மணிரத்னம் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? மறுபடியும் ஒரு 500 கோடி ரூபாய் படம் கன்ஃபர்ம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் நேற்று ரூ.400 கோடியை தாண்டி வசூல் ஆகியது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்றும் அதே போல் ’பொன்னின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தை பார்த்த அனைவரும் இரண்டாம் பாகத்தை பார்ப்பார்கள் என்பதால் இரண்டாம் பாகமும் ரூ.500 கோடி வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், மணிரத்தினம் அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இரண்டு படங்களில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஒரு படத்தை சிபிச்சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த நிலையில் இன்னொரு படத்தை மணிரத்னம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம், லைகா, ரஜினிகாந்த், ஏஆர் ரகுமான் இணையும் இந்த கூட்டணி மீண்டும் ஒரு ரூ.500 கோடி வசூல் படத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.