close
Choose your channels

காற்று வெளியிடை' படத்தின் முக்கிய பணி முடிந்தது

Tuesday, July 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்த அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் இயக்குனர் அறிவிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கார்த்தி விமான பைலட்டாக நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். மேலும் ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜேபாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக நடித்து வருகின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் படமான உருவாகி வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment