காற்று வெளியிடை' படத்தின் முக்கிய பணி முடிந்தது

  • IndiaGlitz, [Tuesday,July 26 2016]

இயக்குனர் மணிரத்னம் இயக்கி வந்த அடுத்த படமான 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஊட்டியில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் இயக்குனர் அறிவிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கார்த்தி விமான பைலட்டாக நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். மேலும் ஷராதா ஸ்ரீநாத், ஆர்ஜேபாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்து இந்த படத்தின் சப்போர்ட்டிங் கேரக்டர்களாக நடித்து வருகின்றனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. ரொமான்ஸ் மற்றும் த்ரில்லர் படமான உருவாகி வரும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

விஷாலின் 'கத்திச்சண்டை' படத்திற்கு இன்னொரு டைட்டில்

சமீபத்தில் வெளியான 'மருது' வெற்றி படத்தை அடுத்து விஷால் நடித்து வரும் அடுத்த படம் 'கத்திச்சண்டை'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார்...

அதர்வாவின் 'போதை' படத்தில் பாலியல் தொழிலாளி

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா முரளி தற்போது 'செம போதை ஆகாதே'...

'எந்திரனை' விட இருமடங்கு. 'கபாலி'யின் அசைக்க முடியாத சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

'அஜித் 57' படத்தின் நீளமான ஷூட்டிங் பிளான்

தல அஜித் நடிக்கும் 57 வது படமான 'ஏகே 57' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

'குக்கூ' இயக்குனரின் 'ஜோக்கர்' சென்சார் தகவல்

பிரபல எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய 'குக்கூ' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...