செக்க சிவந்த வானம்: முதல் நாளில் செய்த அபார வசூல்

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிகாலை ஐந்து மணி காட்சி முடிந்தவுடனே சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் இந்த படம் ரூ.7,4 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' மற்றும் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முதல் நாள் அதிக வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

'செக்க சிவந்த வானம்' திரைப்படம் முதல் நாளில் சென்னையில் ரூ.89 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.2.1 கோடியும், கோவையில் ரூ.1.02 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் செய்து ஓப்பனிங் வசூலில் ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

தமிழக அரசின் புதிய உத்தரவால் தியேட்டர் கட்டணங்கள் மீண்டும் உயர்வா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்கு கட்டணங்கள் உயர்ந்ததால் சினிமா ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கமல், விஷால் பாணியில் டிவிக்கு வரும் சூரி

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே டிவிக்கு வருவார்கள்.

மொழி தெரியாத ஹீரோ என்பதால் எனக்கு வசதியாக இருந்தது: 'நோட்டா' இயக்குனர் ஆனந்த் சங்கர்

அர்ஜூன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா, சன்சனா, சத்யராஜ், நாசர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

சிம்புவின் அடுத்த பட நாயகி 'பிக்பாஸ்' ஐஸ்வர்யா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கடந்த பல வாரங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய நிலையில்

ஹவுஸ்புல்லான அதிகாலை காட்சிகள்: மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்ட மணிரத்னம்

கோலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களின் வசம் சென்றுவிட்டது. இளம் இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீனியர் இயக்குனர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டனர்.