இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த முதல்வரை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட கவர்னர்

  • IndiaGlitz, [Monday,March 13 2017]

பிரபல சமூக சேவகியும், மணிப்பூரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவருமான இரோம் ஷர்மிளாவை வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற வைத்து தோற்கடித்தவர் மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். இவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டுள்ளார். ஏன் என்பதை தற்போது பார்ப்போம்.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இங்கு காங்கிரஸ் 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களையும் பெற்றது. இருப்பினும் தங்களுக்கு தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் உள்பட ஆட்சி அமைக்க தேவையான 32 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக பாஜக சார்பில் ஆட்சி அமைக்க ஆளுனர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் உரிமை கோரப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதல்வரான இபோபி சிங் அவர்களும் தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஏற்கனவே பாஜக, தேசிய மக்கள் கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளதால் முதல்வர் கொண்டு வந்த ஆதரவு கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய கவர்னர், உடனடியாக பதவியை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதனால் விரைவில் அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

16 ஆண்டுகள் போராடிய ஒரு சமூக போராளியை தோற்கடித்த பாவம்தான் அவருக்கு முதல்வர் பதவி போக காரணம் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

கமல் பேட்டிக்கு வைகைசெல்வன் எதிர்ப்பு, நாஞ்சில் சம்பத் ஆதரவு.. என்ன நடக்குது சசிகலா அணியில்?

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் யாருக்காக வாக்கு அளித்தார்களோ அவர் இன்று இல்லை என்பதால் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா ஆதரவாளரும், தமிழக அமைச்சருமா&#

ராகவா லாரன்ஸ், தனுஷூடன் இணைந்த ஆர்யா

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான ஆர்யா நடித்த படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிக்கனியை பறிக்காத நிலையில் அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் 'கடம்பன்'.

கமல் ஹாசனின் கனவு பலிக்காது: அமைச்சர் வைகை செல்வன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் வேறொரு தலைமைக்காகத்தான் வாக்களித்தார்கள்

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட நாயகி?

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர் என்றால் அவர் விஜய்சேதுபதிதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

பிரபல தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி

சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா...