மணிப்பூர்: 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகிக்கு வெறும் 85 ஓட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா என்ற சமூக சேவகி 16 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டமன்ற தேர்தலுக்காக புதிய கட்சி ஆரம்பித்து மாநிலம் முழுவதும் தேர்தலை சந்தித்தார் ஷர்மிளா.
மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கை எதிர்த்து தொபல் தொகுதியில் அவரே போட்டியிட்டார். ஆனால் 16 ஆண்டுகள் பொது பிரச்சனை ஒன்றுக்காக உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளா டெபாசிட் இழந்ததோடு அவருக்கு கிடைத்த ஓட்டுக்கள் வெறும் 90 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மிளா மட்டுமின்றி அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவருமே குறைந்த வாக்குகளே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் முதல்வர் ஓக்ரம் இபோபி 18,649 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
மணிப்பூரில் மொத்தமுள்ள 63 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் பாஜக 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout