இப்படி ஒரு வேலையே எனக்கு வேணாம். அதுக்கு நான் வீட்லயே இருந்திடுவேன்: CWCயில் இருந்து விலகிய மணிமேகலை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வைத்து கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் மணிமேகலை ஆங்கராக இருந்த நிலையில் அவருக்கும் இதே நிகழ்ச்சியில் ஆங்கராக இருக்கும் ஒரு போட்டியாளருக்கும் மணிமேகலைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் அதனால் அவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை வெளியேறியதாகவும் நேற்று செய்தி வெளியானது
இதனை மறைமுகமாக அந்த ஆங்கரை குறிப்பிட்ட மணிமேகலை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து மீண்டும் மணிமேகலை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் ’நான் 15 வயது வருடமாக அதாவது கல்லூரியில் படிக்கும்போது 17 வயதில் இருந்தே பல ஆண்டுகளாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூன்று சீசனில் கோமாளியாகவும் இரண்டு சீசனில் தொகுப்பாளியாக பணிபுரிந்து வந்தேன்.
இந்த சீசனில் நான் ஆங்கராக நுழைந்த முதல் நாள் முதல் நேற்று வெளியேறிய நாள் முதல் என்னுடைய வேலையில் ஒரு போட்டியாளர் மூக்கை நுழைத்தார். சில நாட்கள் அதை நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் சும்மா இருக்க முடியாது. அவர் போட்டியாளராக மட்டும் இன்றி வேறு சில விஷயங்களை செய்ததால் அவரிடமே இதை நான் சொல்லி விட்டேன்.
ஆனால் நான் சீனியர், என்னிடம் நீ எப்படி சொல்லலாம் என்று அவர் கேட்டார். அவரை பகைத்துக் கொண்டால் எனக்கு இழப்புகள் ஏற்படலாம் என்றும் சிலர் கூறினர். இப்படி ஒரு வேலை எனக்கு தேவையில்லை. அதற்கு நான் வீட்டிலேயே சும்மா இருந்து விடுவேன். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அவருக்கு நிறைய ஷோ கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள். எல்லா நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கட்டும்’ என்று நெத்தியடியாக அந்த வீடியோவில் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
List of Anchors who didn't get a opportunity to host a show in #Vijaytv
— Prakash Twetz (@prakash_twetz) September 15, 2024
Manimegalai
Anitha sampath
Farina
Nachathra (TS serial lead)
Jacqueline
Sangeetha(kkk malar teacher)
Pavithra #PriyankaDeshpande Dominance is the only reason 👎🏻💯 #Manimegalai pic.twitter.com/YN8KsaPZTj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments