உளறிகிட்டே இருக்காம உருப்புட்ற வழிய பாரு.. மணிமேகலையின் காட்டமான பதிவு..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

நெட்டிசன் ஒருவர் மணிமேகலையின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த நிலையில் மணிமேகலை அதற்கு பதிலடியாக ஆவேசமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் மணிமேகலை என்பதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மணிமேகலை, நடன இயக்குனர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பெற்றோர் சம்மதம் இல்லாமல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவரது காதல் மற்றும் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். லவ் ஜிகாத் என்ற அவர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை குறிப்பிட்டிருக்கும் நிலையில் மணிமேகலை அந்த பதிவுக்கு ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

இப்படி வாழ்க்கையில் முழுவதும் உளறிக்கிட்டே இருக்குறதுக்கு, போய் உருப்படுற வழியை பார்க்கலாம்ல்ல.. என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.