மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் - பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மணிகண்டன் அதன் பின்னர் ’குட் நைட்’, ’லவ்வர்’ ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இந்த நிலையில், மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்திற்கு "குடும்பஸ்தன்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டரில் பத்துக்கும் மேற்பட்ட மணிகண்டன் ஸ்டில் மட்டுமே காணப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜேஷ் காளிச்சாமி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Elated to launch the interesting first look poster of #Kudumbasthan. Another entertaining film on the way from @manikabali87, best wishes to the entire team 🤗@Cinemakaaranoff @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @prasannaba80053 @VaisaghOfficial… pic.twitter.com/QrETzZoCHS
— Silambarasan TR (@SilambarasanTR_) September 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments