மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் - பர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மணிகண்டன் அதன் பின்னர் ’குட் நைட்’, ’லவ்வர்’ ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இந்த நிலையில், மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்திற்கு குடும்பஸ்தன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரே வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டரில் பத்துக்கும் மேற்பட்ட மணிகண்டன் ஸ்டில் மட்டுமே காணப்படுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேஷ் காளிச்சாமி என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

'வேட்டையன்' ரன்னிங் டைம் இவ்வளவா? என்ன சர்டிபிகேட்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதுகிறதா இந்த படம்? விரைவில் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதே தேதியில் இன்னொரு திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும்,

'ஜெயிச்சிருச்சு மாறா': சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தமிழில் ட்விட் போட்ட ஹர்பஜன் சிங்

'கிரிக்கெட் மீது நீங்க வச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்ததை அடுத்து அந்த ட்வீட் தற்போது இணையத்தில்

முருகனுக்கு ஹோமம் செய்வது எப்படி.? பலன்கள் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் அவர்கள் அளித்த பேட்டி, ஹோமம் பற்றிய முழுமையான புரிதலை வழங்குகிறது.

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் சசிகுமார் - சிம்ரன்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

ஒரே படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் நிலையில், இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.